/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பால் ஆறாக ஓடிய குடிநீர்
/
குழாய் உடைப்பால் ஆறாக ஓடிய குடிநீர்
ADDED : ஜன 04, 2024 12:22 AM

திருப்பூர் : ஊத்துக்குளி ரோட்டில் குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் சேதமானது. இதிலிருந்து அதிகளவில் குடிநீர் ரோட்டில் பாய்ந்து வீணாகியது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, டி.எம்.எப்., மருத்துவமனை அருகே நேற்று இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இடத்தில் ரோட்டோரம் இருந்த குடிநீர் குழாய் ஏர் வால்வு, சேதமானது.
அதில், ஏர் வால்வு உடைந்து அதிகளவிலான குடிநீர் ரோட்டில் பாய்ந்து ஆறு போல் ஓடி வீணாகியது. தகவல் அறிந்து விரைந்த மாநகராட்சி குடிநீர்ப் பணியாளர்கள் உடனடியாக குடிநீர் சப்ளையை நிறுத்தி, குடிநீர் வீணாவதை தடுத்தனர். தொடர்ந்து உடைப்பு சரி செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர்.