ADDED : அக் 30, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:  கோவை - திருச்சி ரோடு, பொங்கலுார், செட்டிபாளையம் அருகே ரோட்டோரத்தில் உள்ள குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது.
பருவமழையும் போதுமான அளவு பொய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீருக்கே பற்றாக்குறை உள்ள நிலையில் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விரயம் ஆவதை தவிர்ப்பது அவசியம்.

