/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாக்கடை கால்வாயில் கலந்து குடிநீர் வீண்
/
சாக்கடை கால்வாயில் கலந்து குடிநீர் வீண்
ADDED : அக் 07, 2025 01:13 AM

திருப்பூர், குமார் நகரில் இருந்து வளையன்காடு செல்லும் பிரதான ரோட்டில், நான்காவது குடிநீர் திட்ட குழாயில் இருந்து காலை, 10:00 மணி முதல் குடிநீர் வெளியேறி சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. எட்டு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் பெருக்கெடுத்து வருகிறது. குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் சூழலில், யாருக்கும் பயனில்லாமல் வீணாக சாக்கடையில் சென்று வருவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். ஆனால், மாலை, 6:00 மணி வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து, குடிநீர் வெளியேறி வருகிறது.
இதுதொடர்பாக, 27வது வார்டு கவுன்சிலர் ரவிசந்திரனிடம் கேட்டதற்கு, ''நான்காவது குடிநீர் திட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், சோதனையின் அடிப்படையில், குடிநீர் வெளியேறி இருக்கும். இதுகுறித்து அதிகாரியிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக நிறுத்தப்படும் என்று தெரிவித்தனர்,'' என்றார்.