/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதல்
ADDED : அக் 07, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பல்லடம், சித்தம்பலம், நவக்கிரக கோட்டையில், அட்சரம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில், திருக்குறள் முற்றோதல் நடந்தது.
கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமை வகித்து பேசுகையில், ''மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள திருக்குறள் உதவும். பிறரிடத்தில் அன்பாக பேசு; பொய் பேசாதீர். உண்மையாக இருக்க வேண்டும். தாய், தந்தையர், ஆசிரியரை மதிக்க வேண்டும். அறவழியில் பயணிக்க வேண்டும் என்பதை திருக்குறள் எடுத்துரைக்கிறது,'' என்றார். நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று, திருக்குறளை, பொருளுடன் வாசித்தனர்.