/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடைக்கோடிக்கு செல்லாத குடிநீர்; தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள்
/
கடைக்கோடிக்கு செல்லாத குடிநீர்; தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள்
கடைக்கோடிக்கு செல்லாத குடிநீர்; தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள்
கடைக்கோடிக்கு செல்லாத குடிநீர்; தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள்
ADDED : ஆக 20, 2025 01:14 AM
திருப்பூர்; சாமளாபுரம் பேரூராட்சியின் கடைக்கோடிப் பகுதியான வேலாயுதம்பாளையம் பகுதியில் குடிநீர் சப்ளை செய்து ஒரு மாதமாகிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் தவிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.
சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது வேலாயுதம்பாளையம் கிராமம். பேரூராட்சியின் கடைக்கோடிப் பகுதி. நுாற்றுக்கணக்கான வீடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் உள்ளது. வீடுகள், விசைத்தறி கூடங்கள், மில்கள், விவசாய தோட்டங்கள் ஆகியன உள்ளன.
இப்பகுதிக்கு பில்லுார் குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஊரின் எல்லையில் அமைந்துள்ள மேல்நிலைத் தொட்டிக்கு பிரதான குழாய் மூலம் குடிநீர் நிரப்பப்பட்டு, வீடு மற்றும் பொதுக்குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்து ஏறத்தாழ ஒரு மாதமாகிறது. இதனால் குடிநீருக்கு வழியில்லாமல் கிடைக்கும் போர் வெல் குழாய் மற்றும் விவசாய கிணறுகளிலிருந்துபெறப்படும் தண்ணீரையும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், 'எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கி ஒரு மாதமாகிறது. இதனால், குடிநீருக்கு தவிக்கும் நிலை உள்ளது. பேரூராட்சி தலைவர், கவுன்சிலர் மற்றும் செயல் அலுவலரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
என்ன காரணத்தால் குடிநீர் வரவில்லை என்பதைக் கூட சொல்லவில்லை. எங்கள் பகுதிக்கு வர வேண்டிய குடிநீரை வேறு பகுதிக்கு வழங்குகிறார்களோ என்று சந்தேகமாக உள்ளது,' என்றனர்.