/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவர், நடத்துனர் விடுப்புக்கு தடை
/
டிரைவர், நடத்துனர் விடுப்புக்கு தடை
ADDED : அக் 16, 2025 06:47 AM
திருப்பூர்: தீபாவளி சிறப்பு பஸ் இயக்கத்தையொட்டி, அரசு பஸ் டிரைவர், நடத்துனர் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள், இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக, 20,372 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்கள் இயக்கம் சீராக இருக்க, சிறப்பு பஸ் இயக்க பணியில் உள்ள டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், கிளை மேலாளர் உள்ளிட்டோர், இன்று முதல் வரும், 21ம் தேதி வரை ஆறு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டாம் என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.