/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் தயாராகிறது: சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவக்கம்
/
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் தயாராகிறது: சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவக்கம்
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் தயாராகிறது: சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவக்கம்
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் தயாராகிறது: சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவக்கம்
ADDED : அக் 16, 2025 06:06 AM

நாளை மறுதினம் முதல் பனியன் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு தீபாவளி விடுமுறை துவங்கும் நிலையில், தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க பலர் ஆயத்தமாகி வருகின்றனர். திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள் வசதிக்காக, 620 சிறப்பு பஸ்களை இயக்க, திருப்பூர் மண்டல போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதைக் கண்காணிக்க, 65 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 270 பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 220; மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 120 என மொத்தம், 620 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக, நேற்றிரவு திருப்பூரில் இருந்து சென்னைக்கு ஐந்து பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, அரசு மருத்துவமனை பழைய புறநோயாளிகள் பிரிவு, மாவட்ட சித்தா மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று தரைத்தளத்தை சமப்படுத்தும் பணியும், பயணிகள் நின்று பஸ் ஏற மரத்தடுப்பு, பஸ்கள் உள்ளே, சென்று வெளியே வரும் வகையில் நுழைவு வாயில் சீரமைப்பு பணியும் நடந்தது. ஒரு பஸ் வரவழைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இரவு - பகலாக பஸ் இயக்கம் இருக்கும் என்பதால், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தும் பணிகளும் நடக்கின்றன.
இன்று துாய்மைப்பணி
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் தயாராகியுள்ள நிலையில், கோவில்வழி, புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இன்று துாய்மை பணி நடக்கிறது. பொது மற்றும் கட்டணக் கழிப்பிடங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு, குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு, சுகாதார ஊழியர்கள் மூலம் 'மாஸ்கிளீனிங்' மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு பஸ் வரும் வரை மக்கள் காத்திருக்க, நின்று பஸ் ஏற வசதியாக மரத்தடுப்புகள் கட்டப்பட உள்ளது. மூன்று பஸ் ஸ்டாண்டிலும் தகவல் மையம் உருவாகிறது.தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவங்கினாலும், வரும், 18 மற்றும், 19 ம் தேதியே அதிகளவில் கூட்டம் இருக்கும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப இன்றும், நாளையும் சிறப்பு பஸ் எண்ணிக்கை சற்று குறைவாகவும், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் சிறப்பு பஸ் இயக்கத்தை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.