ADDED : பிப் 10, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி ஓட்டுச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப் பதிவு மெஷின்கள், நல்லுார் மண்டலம், கே.பி.என்., காலனி மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இவை, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. மாநகராட்சி வசம் இருந்த 689 ஓட்டுப்பதிவு மெஷின்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, உதவி கமிஷனர் வினோத், தேர்தல் துணை தாசில்தார் வசந்தா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

