/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைகொடுக்காத மழை நீர்நிலைகளில் வறட்சி
/
கைகொடுக்காத மழை நீர்நிலைகளில் வறட்சி
ADDED : ஏப் 12, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது.
ஆனால், விவசாயம் நிறைந்த பொங்கலுார் வட்டாரத்தில் மழை கை கொடுக்கவில்லை. இதனால், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு கிடக்கிறது. மழை நன்றாக பெய்தால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், போதிய மழை பெய்யாததால் பொங்கலுார் வட்டாரத்திலுள்ள உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.