/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசை தாக்கிய போதை நபர் சுற்றிவளைப்பு
/
போலீசை தாக்கிய போதை நபர் சுற்றிவளைப்பு
ADDED : டிச 20, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அரசு மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், அங்கேரிபாளையம், ஏ.எஸ்.எம். காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 41; கூலி தொழிலாளி. நேற்று திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மதுபோதையில் சுற் றிக் கொண்டிருந்தார்.
பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தங்கவேல், சுரேஷ்குமாரை பிடித்து நிறுத்தியுள்ளார். அவருடன் தகராறு செய்த சுரேஷ்குமார், அவரை தாக்கியுள்ளார். திருப்பூர் தெற்கு போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

