sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விருதுநகரில் ரூ.15 கோடி மதிப்பு தங்கம், வெள்ளி சிக்கியது

/

விருதுநகரில் ரூ.15 கோடி மதிப்பு தங்கம், வெள்ளி சிக்கியது

விருதுநகரில் ரூ.15 கோடி மதிப்பு தங்கம், வெள்ளி சிக்கியது

விருதுநகரில் ரூ.15 கோடி மதிப்பு தங்கம், வெள்ளி சிக்கியது

5


UPDATED : மார் 17, 2026 07:13 PM

ADDED : மார் 17, 2026 06:32 PM

Google News

5

UPDATED : மார் 17, 2026 07:13 PM ADDED : மார் 17, 2026 06:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் இன்று நடந்த வாகன சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிர வாகன தணிக்கை செய்து கணக்கு காட்டப்படாத பணம், நகை மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 2 நாட்களில் மட்டும் 23.28 கோடி ரூபாய் மதிப்பு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், மதுரையில் இருந்து நாகர்கோவில் மார்த்தாண்டம் நோக்கி சென்ற கூரியர் வேனை விருதுநகரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 14.02 கோடி மதிப்பிலான தங்கம், வெற்றி, வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாஜலபுரம் போலீஸ் சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 90 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வடிவேலிடம் ஒப்படைத்தனர்.

இன்று ஒரே நாளில் விருதுநகரில் மட்டும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊட்டியில்சிக்கிய ரூ.2.50 கோடி தங்க நகை

ஊட்டி, தொட்டபெட்டா அருகில் உள்ள பேரார் பகுதியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து, ஊட்டிக்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், அந்த வாகனத்தில், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதும், கோவையிலுள்ள ஒரு நகை கடையிலிருந்து, ஊட்டியில் உள்ள நகை கடைக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, பறக்கும் படையினர், தங்க நகைகளுடன் அந்த, 'ஆம்னி' வேனை பறிமுதல் செய்து, ஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'இந்த சம்பவம் தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது' என்றனர்.








      Dinamalar
      Follow us