திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
UPDATED : மார் 17, 2026 06:06 PM
ADDED : மார் 17, 2026 05:49 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் 2025 டிச.,1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,'வழக்கமான இடங்களைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார். இதற்கு எதிராக கோயில் செயல் அலுவலர், கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.
ஜன.,6ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'தமிழ் மாதமான கார்த்திகையில் வரும் கார்த்திகை தீபத் திருவிழாவி ன் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்,' என உத்தரவிட்டு மனுக்களை பைசல் செய்தது.
தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என டிச.,1ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,' என டிச.,4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு நேற்று விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் இன்று (மார்ச் 17) ஒத்திவைத்தனர்.
இன்று விசாரித்த நீதிபதிகள்,திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நீதிமன்றம் கூறும் நபர்களுக்கு தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

