ADDED : ஆக 26, 2025 11:08 PM
திருப்பூர்; திருப்பூர் ரோட்டரி மிட்டவுன் சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி, முக்கிய நிகழ்வாக, ஜூனியர் பேட்மின்டன், லீக் - 2025 போட்டி நடத்தப்பட்டது. கணபதிபாளையம் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இப்போட்டிகள் நடந்தது. முன்னதாக சங்க தலைவர் வினோத்குமார் வரவேற்றார். திருப்பூர் ரோட்டரி மாவட்டத்திலிருந்து, 130 பேர் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடினர்.
கிட்ஸ் கிளப் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், முன்னாள் ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கினர். போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.
பொருளாளர் சந்துரு, முன்னாள் தலைவர் அருணாசலம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சங்க செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.