நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ், 25. இவரது நண்பர் அனில், 28. திருப்பூர், ரங்கநாதபுரம், தெய்வீக நகரில் ஹாஸ்டலில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
நேற்று அறையில் அமர்ந்து, இருவரும் மது அருந்தினர். அப்போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அனில், ஆகாஷை கத்தியால் குத்தியதில் அவர் இறந்தார். வேலம்பாளையம் போலீசார் அனிலை கைது செய்தனர்.