/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்டிகை பர்சேஸ்; நகரில் குவியும் கூட்டம்! கண்காணிப்பில் அலட்சியம்
/
பண்டிகை பர்சேஸ்; நகரில் குவியும் கூட்டம்! கண்காணிப்பில் அலட்சியம்
பண்டிகை பர்சேஸ்; நகரில் குவியும் கூட்டம்! கண்காணிப்பில் அலட்சியம்
பண்டிகை பர்சேஸ்; நகரில் குவியும் கூட்டம்! கண்காணிப்பில் அலட்சியம்
ADDED : அக் 12, 2025 10:50 PM

உடுமலை:தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கு, பொருட்கள் வாங்க நகரில் மக்கள் குவிந்து வரும் நிலையில், முக்கிய வீதிகளில், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
உடுமலை நகரில், வ.உ.சி., வீதி, சத்திரம் வீதி, தளி ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு உள்ளிட்ட ரோடுளில், வணிக கடைகள் அதிகளவு அமைந்துள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு, புத்தாடை மற்றும் இனிப்பு வாங்க மக்கள் நகரில் குவிந்து வருகின்றனர்.
பெரும்பாலான கடைகள் குறுகலான பகுதிகளில் அமைந்துள்ளதால், வாகனங்களை நிறுத்த இடவசதியில்லை. இதனால், நேற்று பெரும்பாலான ரோடுகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொருட்கள் வாங்க வந்த மக்கள் அவதிப்பட்டனர். இனி வரும் நாட்களில், மாலை நேரங்களில் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
வழக்கமாக, தீபாவளி பண்டிகைக்கு முன், போலீஸ் சார்பில், முக்கிய வீதிகளில், தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து திருப்பி விடப்படும். கண்காணிப்புக்கும் போலீசார் நியமிக்கப்பட்டு, அதிக நெரிசல் உள்ள இடங்களில், கேமராக்கள் பொருத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு இத்தகைய கண்காணிப்பு எதுவும் துவங்காத நிலையில், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நெரிசலால், வியாபாரமும் பாதிக்கும் சூழல் உள்ளது. பார்க்கிங் விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக நெரிசல் ஏற்படும் வீதிகளில், குற்றத்தடுப்பு பணிகளுக்கு போலீசாரை நியமிக்க வேண்டும்; அனைத்து வீதிகள் மற்றும், பஸ் ஸ்டாண்ட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, தீவிர கண்காணிப்பு செய்ய உடுமலை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.