ADDED : நவ 16, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: கடந்த ஆடி மாதத்தில் முருங்கை சீசன் துவங்கியது. சீசன் காலத்தில் முருங்கை வரத்து அதிகரித்ததால் விலை சரிவு கண்டது.
கிலோ பத்து ரூபாய்க்கு விலை போனது. மழையின்றி வறண்ட வானிலை நிலவியதால் முருங்கை இதுவரை சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சீசன் முடிவு பெற்றுள்ளதால் முருங்கை வரத்து மிகவும் சரிந்து விட்டது.
இதனால் முதல் தரமான கரும்பு ரக முருங்கை கிலோ, 100 ரூபாய்க்கு விலை போகிறது. திருமண சீசன் களை கட்டி உள்ளதால் முருங்கைக்கான தேவை மேலும் அதிகரிக்கும்.
அடுத்து மாசி, பங்குனி மாதங்களில் தான் முருங்கை சீசன் துவங்கும். அதுவரை முருங்கை வரத்து மிகவும் குறைந்து விலை உச்சத்தில் இருக்கும். முருங்கை பிரியர்களுக்கு இது கசப்பான செய்தியாகும்.

