sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சதமடிக்கும் முருங்கை விலை வரத்து சரிவால் மாற்றம்

/

 சதமடிக்கும் முருங்கை விலை வரத்து சரிவால் மாற்றம்

 சதமடிக்கும் முருங்கை விலை வரத்து சரிவால் மாற்றம்

 சதமடிக்கும் முருங்கை விலை வரத்து சரிவால் மாற்றம்


ADDED : மார் 03, 2026 05:58 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: முருங்கை வரத்து உடுமலை சந்தைகளுக்கு குறைந்துள்ளதால், விலை கிலோவுக்கு நுாறு ரூபாயை தொடும் நிலைக்கு சென்றுள்ளது.

உடுமலை தினசரி சந்தை உள்ளிட்ட சந்தைகளுக்கு முருங்கை, ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, தேவைக்கேற்ப முருங்கை வரத்து இல்லை.

அதிக வெயில் உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்களால், முருங்கை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளிலும், முருங்கை சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. தட்டுப்பாடு அதிகரிப்பால், முருங்கை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று உடுமலை உழவர் சந்தையில், முருங்கை விலை கிலோ, 80-95 ரூபாய் வரை விற்பனையானது.

பிற சந்தைகளில், கிலோ நுாறு ரூபாயை விலை தொட்டது. வரும் வாரங்களில் வரத்து குறைந்து, முகூர்த்த சீசனும் துவங்குவதால், முருங்கை விலை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் பிற காய்கறிகள் விலை குறைய துவங்கியுள்ளது. உழவர் சந்தையில் தக்காளி கிலோ 14-16, சின்னவெங்காயம் 30-35, சுரைக்காய், 10-15, புடலை 15-20 என்றளவில் விலை இருந்தது. பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால், கிலோ 45-50 ரூபாய் என்றளவுக்கு விற்பனையானது.

பெரியவெங்காயம் 25-30, வெண்டை 35-40, பீர்க்கன் 40-45, முள்ளங்கி 18-24, பீன்ஸ் 55 -60, பாகற்காய் 35-45, உருளைக்கிழங்கு 30 -35, தேங்காய் 40-60 என்ற அளவில் விற்பனையானது.






      Dinamalar
      Follow us