/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்ற லதுவே படை!டி.எஸ்.சி., அணி தொடர்ந்து ஆதிக்கம்
/
ஆற்ற லதுவே படை!டி.எஸ்.சி., அணி தொடர்ந்து ஆதிக்கம்
ADDED : ஜன 16, 2024 02:36 AM
டி.எஸ்.சி., சேலஞ்ர் டிராபி கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறது.
திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, பத்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. ஜன., 13 முதல், தினமும் இரு போட்டிகள் நடந்து வருகிறது. பல்வேறு அணிகள் பங்கேற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற, திறமை காட்டி விளையாடி வருகின்றன.
முருகம்பாளையம் வயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற சி.ஜி., ஹப் ஆப் கிரிக்கெட் அணி, 30 ஓவரில், எட்டு விக்கெட் இழந்து, 121 ரன் எடுத்தது. அணியின் பேட்ஸ்மேன்கள் நிஷாந்த், 34 ரன், கிஷாந்த், 32 ரன் எடுத்தனர்.
எளிய இலக்கை விரட்டிய கேரளா திருப்பனித்துறா அணி, 23 ஓவரில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 122 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன் அமேமனோஜ், அரைசதம் (52 ரன்) கடந்து, ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்; இவரே, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு போட்டியில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 30 ஓவர் நிறைவில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 221 ரன் குவித்தது. அணியின் பேட்ஸ்மேன் ராகவ், 70 ரன் எடுத்தார்.
இலக்கை விரட்டிய, டான்பாஸ்கோ அணி, 30 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 84 ரன் மட்டுமே எடுத்தது. 137 ரன் வித்தியாசத்தில், டான்பாஸ்கோ அணி வெற்றி பெற்றது. திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் ராகவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.