/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று இ - நாம் திட்ட விழிப்புணர்வு கூட்டம்
/
இன்று இ - நாம் திட்ட விழிப்புணர்வு கூட்டம்
ADDED : பிப் 03, 2025 11:37 PM
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டம் குறித்து மக்காச்சோளம் வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் மக்காச்சோளத்தை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர்.
அங்கு உலர் களங்களில் அவற்றை காயவைத்து, இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஈரப்பதம், தரம் ஆய்வு செய்து, தேசிய வேளாண் சந்தையான இ-நாம் திட்டத்தின் கீழ் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இ-நாம் திட்டத்தில், வியாபாரிகள், மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் அதிகளவு பங்கேற்கவும், ஏல முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இன்று காலை, 11:00 மணிக்கு. மக்காச்சோளம் வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கிறது, என ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இ - நாம் திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை வழங்கும் இக்கூட்டத்தில், வியாபாரிகள் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.