/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இ-நாம்' முறையில் ஏலம்; கொப்பரை கிலோ ரூ.201
/
'இ-நாம்' முறையில் ஏலம்; கொப்பரை கிலோ ரூ.201
ADDED : ஆக 21, 2025 08:24 PM

- நிருபர் குழு -
உடுமலை, ஆனைமலையில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு, 201 ரூபாய் விலை கிடைத்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில், 'இ-நாம்' வாயிலாக கொப்பரை ஏலம் நடந்தது.முதல் தர கொப்பரை, 123 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 196 முதல், 201.16 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 158 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 82 முதல், 182 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 281 கொப்பரை மூட்டைகளை, 45 விவசாயிகள் கொண்டு வந்தனர். 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 20.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 126.45 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
* உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை, தேங்காய் ஏலத்தில், உடுமலை சுற்றுப்பகுதிகளிலிருந்து, 20 விவசாயிகள், 7,400 கிலோ எடையுள்ள, 148 மூட்டைகள் கொப்பரையை கொண்டு வந்தனர். இ-நாம் முறையில் நடந்த ஏலத்தில், 10 வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம் கொப்பரை கிலோவுக்கு, 190.36 முதல் 201.31 ரூபாய் வரை ஏலம் போனது. இரண்டாம் தரம், 131 முதல் 186.33 ரூபாய் வரை ஏலம் போனது. இதன் மதிப்பு, 12 லட்சத்து, 48 ஆயிரத்து, 481 ரூபாய் ஆகும்.
அதே போல், உரித்த தேங்காய் ஏலத்திற்கு, 4 விவசாயிகள், 950 கிலோ கருப்பு தேங்காய் கொண்டு வந்தனர். 6 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் கிலோவுக்கு, 58 முதல் 63 ரூபாய் வரை விற்பனையானது. இதன் மதிப்பு, 57,554 ரூபாயாகும்.
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை, தேங்காய் ஆகியவை தரம் பிரித்து, இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்படுவதால், விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைத்து வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, திருப்பூர் மாவட்ட விற்பனைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.