/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பெம் பள்ளி' சார்பில் பூமி தின விழிப்புணர்வு
/
'பெம் பள்ளி' சார்பில் பூமி தின விழிப்புணர்வு
ADDED : ஏப் 24, 2025 06:36 AM

திருப்பூர்; பூமி தினத்தையொட்டி, திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில், பெம் பள்ளி சார்பில் பூமியைக் காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அறிவியல் ஆர்வலர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். பள்ளித் தமிழ் ஆசிரியர் சரவணன் வரவேற்றார்.
கோடைக்காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப்பிரசுரத்தை 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பின் இயக்குனர் குமார் துரைசாமி வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் கவுரிசங்கர் பெற்றுக்கொண்டார்.
பெம் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினர். பள்ளி முதல்வர் விஜய்கார்த்திக், பெம் பள்ளி சமூகப்பொறுப்புணர்வுடன் செயல்படுவது குறித்து விளக்கிக் கூறினார்.

