/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளியில் கல்வி - ஆன்மிக கண்காட்சி
/
ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளியில் கல்வி - ஆன்மிக கண்காட்சி
ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளியில் கல்வி - ஆன்மிக கண்காட்சி
ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளியில் கல்வி - ஆன்மிக கண்காட்சி
ADDED : நவ 13, 2025 10:21 PM

திருப்பூர்: திருப்பூர் ராம்நகரில் உள்ள ஸ்ரீ சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'டூடுல்ஸ் டூ டிரீம்ஸ்' என்ற தலைப்பில், மாணவர்கள் பங்கேற்ற கல்விக் கண்காட்சி நேற்று துவங்கியது. இன்றும் நாளையும் என மூன்று நாள் இக்கண்காட்சி காலை 9:30 முதல் மாலை 3:30 மணி வரை நடைபெறுகிறது.
இதில் பல்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் தங்கள் பாடம் தொடர்பான பல்வேறு உபகரணங்கள், கண்டுபிடிப்புகளை தங்கள் படைப்புகளாக இங்கு காட்சிப் படுத்தியுள்ளனர்.
மேலும், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா முன்னிட்டு, இக்கண்காட்சியின் ஒரு பகுதியில், அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் உன்னத சேவை; அவரது ஆன்மிக கோட்பாடுகளை அறிய வைத்த; மேலும் ஆன்மீக கல்வியுடன் கூடிய விழுமியக் கல்வியே சிறந்தது என்பதை சமுதாயத்திற்கு உணர வைக்கும் அவரது சித்தாந்தங்களை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
பாடவாரியாக மாணவர்கள் தனித்திறன் வெளிப் படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. மூன்று நாள் நடைபெறும் இக்கண்காட்சியை நேற்று ஆடிட்டர் நாராயணன், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி நிர்வாகிகள், சுமதி ராஜகோபாலன், நாகராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

