/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்காலர்ஷிப் பெயரில் மோசடி: 'சைபர் கிரைம்' போலீசில் புகார்
/
ஸ்காலர்ஷிப் பெயரில் மோசடி: 'சைபர் கிரைம்' போலீசில் புகார்
ஸ்காலர்ஷிப் பெயரில் மோசடி: 'சைபர் கிரைம்' போலீசில் புகார்
ஸ்காலர்ஷிப் பெயரில் மோசடி: 'சைபர் கிரைம்' போலீசில் புகார்
ADDED : நவ 13, 2025 10:21 PM
பல்லடம்: பல்லடம் அருகே, வதம்பச்சேரி மற்றும் நல்லுார்பாளையம் கிராம மக்களை குறிவைத்து, கடந்த இரண்டு நாட்களாக சைபர் மோசடி நடந்து வருகிறது.
இது குறித்து அப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
வதம்பச்சேரி அரசுப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவ மாணவர்களை குறி வைத்து மோசடி செய்யும் விதமாக, சைபர் மோசடி கும்பல் ஒன்று களம் இறங்கியுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலருக்கு, அக்கும்பல் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, உங்களது மகன் அல்லது மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லுாரி சென்றுள்ளதால், மத்திய அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் வந்துள்ளதாக கூறு கின்றனர்.
தொடர்ந்து, ஆண்டுக்கு, 38 ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வந்துள்ளது என்றும், இந்த தொகை 'கூகுள் பே' வாயிலாக அனுப்பப்பட உள்ளதால் உடனடியாக இதைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
'வாட்ஸ் அப்'பில் தொடர்பு கொண்டு, தொகையை அனுப்பி உள்ளதாகவும், நாங்கள் அனுப்பும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, 38 ஆயிரம் ரூபாய் என, டைப் செய்து ஸ்காலர்ஷிப் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.
நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, மத்திய அரசின் லோ கோ மற்றும் உத்தரவு ஆணை உள்ளிட்ட வற்றை காண்பிக்கின்றனர்.
ஆனால், அத்தனையும் போலி என்பதால், அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறான மோசடியில் சிக்கி, வதம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், 42,500 ரூபாயும், மற்றொருவர், 14 ஆயிரம் ரூபாயும் இழந்தனர்.
பணத்தை இழந்தவர்கள், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
வதம்பச்சேரி அரசு பள்ளி மாணவர்களை குறிவைத்து இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொது மக்கள் கூறினர்.

