/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் தகவல் மையங்களை புதுப்பிக்கணும் கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
/
சுற்றுச்சூழல் தகவல் மையங்களை புதுப்பிக்கணும் கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் தகவல் மையங்களை புதுப்பிக்கணும் கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் தகவல் மையங்களை புதுப்பிக்கணும் கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
ADDED : மே 19, 2025 11:26 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் மன்றங்களின் தகவல் பரப்பு மையங்களை, மீண்டும் புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இயற்கை பாதுகாப்பில், மாணவர்களின் பங்களிப்பை மேம்படுத்தவும் மாவட்டந்தோறும், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளுக்கு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் கடந்தாண்டு துவக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்கள், இந்த மையத்தில் வைக்கப்பட்டன. உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் இணைகின்றனர்.
அவர்களுக்கு இதுபோன்ற மையங்கள் வாயிலாக, நிகழ்ச்சிகள் நடத்துவது, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து பயற்சி வகுப்புகள் போன்ற செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த மையம் அமைக்கப்பட்டது.
ஆனால் மையம் துவக்கப்பட்டு ஓராண்டு வரை மட்டுமே, முழுமையாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின் எந்த வகையிலும் பயன்படாமல், பெயரளவில் மட்டுமே சுற்றுச்சூழல் மையமாக இருந்தது. தற்போது இந்த மையத்தை பள்ளி செயல்பாடுக்கென மாற்றிவிட்டனர்.
சுற்றுச்சூழல் திட்டத்தை மேம்படுத்த, அமைக்கப்பட்ட மையத்தை மற்ற பள்ளிகளும், பயன்படுத்தும் வகையில், ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
மேலும், இந்த மையத்தை செயல்பாட்டில் வைத்திருக்க, சுற்றுச்சூழல் துறை சார்ந்த செயல்பாடுகளுக்கு, அரசு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.