ADDED : ஜூன் 29, 2026 11:39 PM

அ நிறம் | அளவு
முதலிபாளையம்: திருப்பூர் 'நிப்ட்-டீ' பின்னலாடை ஆடை வடிவமைப்பு கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கல்லுாரி சேர்மன் கோவிந்தராஜூ தலைமை வகித்தார். தலைமை வழிகாட்டி ராஜா சண்முகம், பொருளாளர் மோகன்குமார், இணை செயலாளர் ஸ்ரீதர், ஆட்சி குழு உறுப்பினர் சண்முகம், 'டீன்' சம்பத் மற்றும் முதல்வர் ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல் மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் மணிகண்டன்ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய 31 மாணவர்களுக்கு, ரூ.11 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை அறக்கட்டளையின் தலைவர் ஜெயசித்ரா சண்முகம் வழங்கினார்.
