
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: திருப்பூர், கல்லாங்காடு பகுதியில் உள்ள தனியார் தொடக்க பள்ளியில் படித்து வருபவர் மாணவி மித்ரா ஸ்ரீ, தந்தையை இழந்த இவருக்கு பெருமாநல்லுாரில் இயங்கி வரும், காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவி தொகையாக 10 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், கண்ணன் மற்றும் மாணவியின் உறவினர்கள், பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

