/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
/
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 17, 2025 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் மாலதி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கோபால் காமராஜரின் சிறப்புகள் குறித்து பேசினார்.
பள்ளி முன்னாள் ஆசிரியர் நிர்மலா மாணவர்களுக்கு சாரண சாரணியர் சீருடை வழங்கினார். மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் புவனா நன்றி தெரிவித்தார்.