ADDED : ஜூலை 14, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காமராஜர் பிறந்த நாள் (ஜூலை 15) ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து மேல்நிலைப்பள்ளிக்கு, 1,500, உயர்நிலைக்கு, ஆயிரம், நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிக்கு, 500 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளை நடத்தி பரிசு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.காமராஜர் விருதுக்கு தேர்வாகும் துவக்கப்பள்ளிக்கு 25 ஆயிரம், நடுநிலைப்பள்ளிக்கு, 50 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கல்வித்துறையால் வழங்கப்பட உள்ளது.