/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ., பெற முனைப்பு
/
கூடுதல் ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ., பெற முனைப்பு
ADDED : ஏப் 25, 2025 07:59 AM
திருப்பூர்; ''திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஏ., தரச்சான்றிதழ் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்'' என்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதி வாளர் பிரபு கூறினார்.
''தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., உள்ளிட்ட தரச் சான்று பெறப்படும்'' என்று சட்டசபையில் அமைச்சர் பெரிய கருப்பன் தெரி வித்தார்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் பிரபு கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 1,190 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியன இந்த கடைகளை நடத்தி வருகின்றன.
கடந்த முறை 180 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவிலான கடைகளுக்கு இச்சான்றிதழ் பெறும் வகையில் உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.
நம் மாவட்டத்துக்கான அளவீடு குறிப்பிட்டு, இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உரிய வழிகாட்டுதல் உத்தரவுகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த உத்தரவு பெற்றவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அவற்றுக்கான முனைப்புடன் துறை மற்றும் கடை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.