/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் நிலம் பாதுகாக்க முனைப்பு
/
கோவில் நிலம் பாதுகாக்க முனைப்பு
ADDED : ஆக 25, 2025 12:42 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டுக்கு உட்பட்ட வி.ஜி.வி., கார்டன் குடியிருப்புக்கும், நொய்யல் ஆற்றங்கரைக்கும் இடையில், 17 ஏக்கர் நிலம் உள்ளது.
இது நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது. புதர்கள் மண்டியும், சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறும் இடமாகவும் மாறியது. இதன் அருகே மாநகராட்சி குப்பை கொண்டு சென்று குவித்து வைப்பதும், அவற்றில் தீ வைப்பதும் சகஜமானது.
சமீபத்தில், இந்த குப்பையில் வைக்கப்பட்ட தீயால் அருகே இருப்பு வைத்திருந்த குடிநீர் குழாய்கள் எரிந்து நாசமாகின. ஒரு மாதத்துக்கும் மேலாக மாநகரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொண்டு சென்று கொட்ட இடமின்றி பெரும் அலைச்சல் ஏற்பட்டுள்ளது. வார்டு பகுதிகளில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் குப்பைகள் மலை போல் கொட்டிக் குவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இடத்திலும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால், என்ன செய்வது என்ற அச்சம் கோவில் நிர்வாகம் தரப்பில் எழுந்தது.
அந்த இடத்தை சுத்தம் செய்து, வேலி அமைத்து பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வாயிலாக இடம் சுத்தம் செய்யும் பணி துவங்கியது. பசுமை அமைப்பினர் வாயிலாக, கோவில் இடத்தில், மரக்கன்றுகள் நட்டு பராமரித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றே பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.