/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி செடிகளை காப்பாற்ற முனைப்பு
/
தக்காளி செடிகளை காப்பாற்ற முனைப்பு
ADDED : அக் 13, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது மழை காலம் துவங்கி உள்ளது. அறுவடைக்கு வரும்போது பருவமழை தீவிரம் அடையும். இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி பழங்கள் அழுகிவிடும். தக்காளிக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் விலை கிடைக்கும். மழையில் இருந்து தக்காளிச் செடிகளை பாதுகாக்க விவசாயிகள் கம்புகளை நட்டு கயிற்றால் கட்டி தொங்க விடுகின்றனர்.
இதற்கு செலவு அதிகரிக்கும் என்றாலும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தக்காளி விலை உயரும். எனவே, உற்பத்திச் செலவை, உபரியாக கிடைக்கும் வருமானத்தை வைத்து ஈடு கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.