/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய சிக்னல் பகுதியில் பந்தல் அமைக்க முனைப்பு
/
முக்கிய சிக்னல் பகுதியில் பந்தல் அமைக்க முனைப்பு
ADDED : மார் 24, 2025 05:11 AM

திருப்பூர், : வெயில் கொளுத்திவரும் நிலையில், திருப்பூரில் வாகன ஓட்டிகள், சிக்னலுக்கு காத்திருக்கும் பகுதிகளில் நிழல் தரும் வகையில், பந்தல் அமைக்கும் முயற்சியை தெற்குரோட்டரி அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம், முன்னாள் தலைவர் சக்திவேல் ஆகியோர் கூறியதாவது:
'நாளும் ஒரு நலத்திட்டம் - நம்மால் முடியும்' என்ற தலைப்பில் தெற்கு ரோட்டரி சார்பில் இதை முன்னெடுத்துள்ளோம்.
தற்போது முதல் கட்டமாக மாநகராட்சி சந்திப்பு பகுதியில் இரு பகுதிகளில் இந்த நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நகரப் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சிக்னல்களிலும் இது அமைக்கப்படும்.
மேலும், 12 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக தெற்கு ரோட்டரி ஹால் முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சந்தை, மார்க்கெட் வளாகம் என 12 இடங்களில் இதை அமைத்து 5 ஆண்டுகள் முழுமையாக பரா மரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.