/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கத்தரி விலை சரிவு; விவசாயிகள் கவலை
/
கத்தரி விலை சரிவு; விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 02, 2025 09:53 PM

உடுமலை; கத்திரி விலை சந்தைகளில் குறைந்து வருவதால், உடுமலை பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஜன., பிப்., மாதங்களில், கத்தரி சாகுபடியை துவக்குகின்றனர்.
தற்போது நாற்றுப்பண்ணைகளில் இருந்து நாற்றுகளை வாங்கி நடவு செய்கின்றனர். தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை சரியத்துவங்கியுள்ளது.
கடந்த வாரம், 20 கிலோ கொண்ட கத்தரி மூட்டை 700 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது; தற்போது, மூட்டை விலை 500 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.