/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏகாதச ருத்ர அபிஷேகம் பாராயண வழிபாடு
/
ஏகாதச ருத்ர அபிஷேகம் பாராயண வழிபாடு
ADDED : ஏப் 18, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா மற்றும் சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அருளாசியுடன் ஏகாதச ருத்ர அபிஷேகம் மற்றும் பாராயணம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட சத்யசாயி மண்டலி சார்பில், அவிநாசி, மேற்கு ரத வீதியில் உள்ள பார்வதி கல்யாண மண்டபத்தில்,ஏகாதச ருத்ர அபிஷேகம் மற்றும் பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாய் குரு சரணாம்ருதம் பஜன் குழுவினரின் சாய் பஜனைகள், சொற்பொழிவுகள் நடைபெற்றது. தொடர்ந்து, மஹா மங்கள ஆரத்தி, அன்ன பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில், திரளான சத்யசாய்பாபா பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

