/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூத்த தம்பதியருக்கு கோவிலில் மரியாதை
/
மூத்த தம்பதியருக்கு கோவிலில் மரியாதை
ADDED : நவ 12, 2025 11:46 PM

திருப்பூர்: கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவிலில், வயது முதிர்ந்த நான்கு தம்பதியருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதியருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக, கொங்கணகிரி கந்தப்பெருமாள் கோவிலில் நேற்று, மூத்த தம்பதியருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, செயல் அலுவலர் பவானி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நான்கு மூத்த தம்பதியர் வரவழைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.
மலர்மாலைகள், வேட்டி மற்றும் துண்டு, சேலை ஆகியவையும், மஞ்சள் - குங்குமம், மஞ்சள் சரடு, பூ மற்றும் கண்ணாடி வளையல்கள், பழவகைகள் தட்டில் வைத்து கொடுக்கப்பட்டன.
தம்பதியர், முருகப்பெருமான் சன்னதி முன் மாலை மாற்றி, புதிய மஞ்சள் சரடு மற்றும் மலர்கள் அணிந்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் இருந்தவர்கள், மூத்த தம்பதியரிடம் ஆசி பெற்றனர்.

