/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிகிச்சையில் இருந்த முதியவர் 'போக்சோ'வில் சிறையிலடைப்பு
/
சிகிச்சையில் இருந்த முதியவர் 'போக்சோ'வில் சிறையிலடைப்பு
சிகிச்சையில் இருந்த முதியவர் 'போக்சோ'வில் சிறையிலடைப்பு
சிகிச்சையில் இருந்த முதியவர் 'போக்சோ'வில் சிறையிலடைப்பு
ADDED : ஜன 23, 2025 12:25 AM
திருப்பூர்; காங்கயத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், 'போக்சோ' வழக்கில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், நத்தக்காடையூரில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த சிவகிரியை சேர்ந்த சண்முகம், 62. இவர் கடந்த வாரம், நான்கு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையறிந்த அப்பகுதியினர் அவரை தாக்கினர்.
காயமடைந்த அவர் கடந்த ஒரு வாரமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
நேற்று அவரை மகளிர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.