/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய் கடித்து குதறிய மூதாட்டிக்கு ஆபரேஷன்
/
தெருநாய் கடித்து குதறிய மூதாட்டிக்கு ஆபரேஷன்
ADDED : ஆக 23, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: நேற்று முன்தினம், பல்லடம் அருகே, வாவிபாளையம் ஊராட்சி, கழுவேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, 85 என்பவரை தெருநாய் ஒன்று கடித்துக் குதறியது.
தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த தெருநாய் ஒன்று, லட்சுமியின் கை, காது, முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியுள்ளது.
அக்கம் பக்கத்தினர், தெரு நாயை விரட்டி அடித்து விட்டு, அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமிக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.