
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வி.ஜி.வி., கார்டனை சேர்ந்த ராமசாமி கடந்த 2021 ல் உயிரிழந்தார்.
அவரது உடல், கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டது. தனது கணவரை போலவே தனது உடலையும் தானம் செய்ய விரும்பினார், இவரது மனைவி மங்குத்தாய். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இறுதி மரியாதை செய்த உறவினர்கள், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ குழுவினரிடம், மங்குத்தாயின் உடலை ஒப்படைத்தனர்.

