/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
/
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுரை
ADDED : மார் 17, 2024 11:44 PM

உடுமலை;லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.
உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்கான பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கான கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, டி.எஸ்.பி.,சுகுமாறன் மற்றும் அலுவலர்கள், போலீசார் பங்கேற்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறல்களை கண்டறிய, சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை சட்டசபை தொகுதியில், 27 மண்டல அலுவலர்கள், மடத்துக்குளம் தொகுதியில், 24 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட சபை தொகுதிக்கு, தலா, 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு பறக்கும் படையிலும், தலா ஒரு அலுவலர், 4 போலீசார், டிரைவர், வீடியோ கிராபர் என, 3 குழுவில், 21 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல், 3 நிலையான கண்காணிப்பு குழுவிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தலா இரண்டு பொருளாதார கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அலுவலர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றவும், தலைவர்களின் சிலைகளை மூடி வைத்தல், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்றுதல் உள்ளிட்ட முதற்கட்ட பணிகளை, விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வாகன சோதனையையும் தீவிரப்படுத்த வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.

