/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை
/
மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ADDED : மார் 13, 2026 05:58 AM

உடுமலை: உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், நேரடியாக அவர்கள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்க தேவையான ஏற்பாடுகளை, தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஓட்டுச்சாவடிக்கு வந்து, ஓட்டளிக்க சிரமப்படும் முதியவர்களுக்காக, கடந்த லோக்சபா தேர்தலில், சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, ஓட்டுச்சாவடி முகவர்கள் வாயிலாக, முதியோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஓட்டளிக்கும் முறை செயல்படுத்தப்பட்டது. இதை பின்பற்றி, இந்த தேர்தலில், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்கும் முறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. இதிலும், 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறன் உடையவர்கள், ஓட்டுச்சாவடிக்கு வராமல், தங்கள் வீடுகளில் இருந்தே ஓட்டு போடலாம்.
உடுமலை தொகுதியில், இப்பட்டியலின்படி, 1,179 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டு போட தேவையான ஏற்பாடுகளை, தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் கவுரிசங்கர் தலைமை வகித்து பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம். இதற்காக அனைத்து ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் அணுகி விளக்கமளிப்பார்கள்,'' என்றார். நகராட்சி கவுன்சிலர் கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

