sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'பி.எப். நடைமுறையில் பயன்களை அதிகரிக்கும் சீர்த்திருத்தங்கள்'

/

 'பி.எப். நடைமுறையில் பயன்களை அதிகரிக்கும் சீர்த்திருத்தங்கள்'

 'பி.எப். நடைமுறையில் பயன்களை அதிகரிக்கும் சீர்த்திருத்தங்கள்'

 'பி.எப். நடைமுறையில் பயன்களை அதிகரிக்கும் சீர்த்திருத்தங்கள்'


ADDED : மார் 13, 2026 05:54 AM

Google News

ADDED : மார் 13, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள பி.எப். மண்டல அலுவலகத்தில், 'சஹாயக்' என்ற ஏஐ. உதவி மையத்தை, மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.

அப்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, கொடிசியா, கொசிமா, உபாசி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று, தங்களின் எதிர்பார்ப்பு, யோசனைகளை பகிர்ந்துக் கொண்டனர்.

ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும், பணியாளர் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில், மத்திய அரசின் முக்கிய திட்டமான பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் அமைந்துள்ளது.

இத்திட்டம், நிறுவனங்களின் உற்பத்தி திறனை உயர்த்துவதோடு, திறமையான பணியாளர்களை உருவாக்க உதவும்.நிறுவனங்கள் இ.சி.ஆர். பதிவை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 'உமாங்' செயலி மூலம் அனைத்து ஊழியர்களின் முக அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.

முதன் முறையாக, பணியில் சேரும் ஊழியர்கள் அனைவருக்கும் 'டிபிடி' வசதியுள்ள வங்கி கணக்குகள் இருக்க வேண்டும். தகுதியுள்ள ஊழியர்கள் இத்திட்டத்தின் நன்மைகளை பெற உதவ வேண்டும்.

நடப்பாண்டு, பி.எப். நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்தும். பிற துறைகளுடன் 'ஏஐ' அடிப்படையிலான ஒருங்கிணைப்பை பயன்படுத்தி, அனைத்து நிறுவனங்களிலும், 100 சதவீத விதிமுறை பின்பற்றுவதே இலக்காக உள்ளது.

எனவே, நிறுவனங்கள், 'இஇசி' எனப்படும், பொது மன்னிப்பு திட்டத்தில் நிறுவனங்கள் தன்னார்வமாக பங்கேற்று பதிவு செயல் முறைகளை ஒழுங்குபடுத்தி, எதிர்காலத்தில் ஏற்படும் அபராதங்களை தவிர்க்க வேண்டும்.தற்போது பி.எப். திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, கல்வி, திருமணத்துக்கு பணம் பெறும் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச சேவை காலம், 12 மாதங்கள் என ஒரே விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில அவசர சூழ்நிலைகளில், காரணம் குறிப்பிடாமலும் பணம் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us