/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுார் கோவிலில் ரூ.7 லட்சம் காணிக்கை
/
பெருமாநல்லுார் கோவிலில் ரூ.7 லட்சம் காணிக்கை
ADDED : மார் 13, 2026 05:54 AM
பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில், புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழ் வாணன், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், ஏழு லட்சத்து, 84 ஆயிரத்து, 923 ரூபாய், 129 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்க நிர்வாகிகள், பெருமாநல்லுார், கே.எம்.சி பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

