தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாக்காளர் பட்டியல் நாளை (நவ.12) வெளியீடு சுருக்கமுறை திருத்தமும் துவங்குகிறது

வாக்காளர் பட்டியல் நாளை (நவ.12) வெளியீடு சுருக்கமுறை திருத்தமும் துவங்குகிறது

வாக்காளர் பட்டியல் நாளை (நவ.12) வெளியீடு சுருக்கமுறை திருத்தமும் துவங்குகிறது


UPDATED : நவ 11, 2026 08:43 PM

ADDED : நவ 11, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 08:43 PM ADDED : நவ 11, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வரும் ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை (நவ. 12) துவங்குகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், ஏற்கனவே 2,822 ஆக இருந்த ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, தேர்தல் கமிஷன் அனுமதியுடன் 2,821 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் முத்துக்குமரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். அதன்பின், டிச., 11ம் தேதி வரை எட்டு தொகுதிகளிலும் உள்ள 2,821 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) வாயிலாக, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்படும்.

வரும் ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள், பெயர் சேர்க்க படிவம் 6 பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், 2027 ஏப்., 1, ஜூலை 1, அக்., 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய படிவம் 8 பயன்படுத்த வேண்டும்.

ஆன்லைனிலும்...

ஓட்டுச்சாவடிக்கு நேரில் செல்லாமல், https://voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது ECI Net மொபைல் செயலி மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து, 2027 ஜன., 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us