/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பள உயர்வு வழங்க மறுப்பு; மின் பொறியாளர் ஆர்ப்பாட்டம்
/
சம்பள உயர்வு வழங்க மறுப்பு; மின் பொறியாளர் ஆர்ப்பாட்டம்
சம்பள உயர்வு வழங்க மறுப்பு; மின் பொறியாளர் ஆர்ப்பாட்டம்
சம்பள உயர்வு வழங்க மறுப்பு; மின் பொறியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2026 06:31 AM

திருப்பூர்: மின் வாரியம் வெளியிட்டுள்ள, கடந்த 2023 டிச., 1 முதல் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு முன்மொழிவு வரைவில், முதல் நிலை மற்றும் 2ம் நிலை அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும், சம்பள உயர்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுவதும், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, 2வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த போராட்டத்துக்கு, ஊத்துக்குளி கோட்ட செயற்பொறியாளர் விஜயேஸ்வரன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்ஸ், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில செயலாளர் சதீஷ்சங்கர், ஜனதா தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ஜேம்ஸ் கென்னடி, மத்திய அமைப்பின் திட்ட பொருளாளர் ஜஸ்டின் திரவியம் உட்பட, பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

