sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தேர்தல் முனைப்பில் தமிழக அரசு ஜவுளி தொழில்துறையினர் அதிருப்தி

/

 தேர்தல் முனைப்பில் தமிழக அரசு ஜவுளி தொழில்துறையினர் அதிருப்தி

 தேர்தல் முனைப்பில் தமிழக அரசு ஜவுளி தொழில்துறையினர் அதிருப்தி

 தேர்தல் முனைப்பில் தமிழக அரசு ஜவுளி தொழில்துறையினர் அதிருப்தி


ADDED : பிப் 28, 2026 06:31 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: தமிழக அரசின் ஒட்டுமொத்த கவனமும் தேர்தலை எதிர்நோக்கி மட்டுமே உள்ளதாகவும், ஜவுளித்தொழில்துறை நெருக்கடிகளை கண்டுகொள்வதில்லை எனவும் ஜவுளி தொழில் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நாடா இல்லா தறி நெசவாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:

நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பு தருவதில் ஜவுளி தொழில் துறை முதலிடத்தில் உள்ளது. அதிலும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள், முழுமையாக ஜவுளி தொழிலை சார்ந்தே உள்ளன.

தமிழகத்தில், பருத்தி உற்பத்தி குறைவு, பஞ்சு, நுால் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலை ஏற்றங்கள் காரணமாக, ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. க

ோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழிலில் ஈடுபட்டு வரும் நாங்கள், வாங்கிய வங்கி கடனையும் செலுத்த முடியாத நெருக்கடி நிலைக்கு ஆளாகி உள்ளோம். ஜவுளி தொழிலை பாதுகாக்க, கழிவுப்பஞ்சு தடையின்றி கிடைக்க வேண்டும், பஞ்சு, நுால் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துதல், மின் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை குறைப்பது மற்றும் சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதற்காக, பல்வேறு போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் மூலம் எங்களது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இதர மாநிலங்கள், மின்சாரம் மற்றும் தொழில்களுக்கான மானியங்கள், சலுகைகள் வழங்கி, ஜவுளி தொழிலை ஊக்குவிக்கின்றன. ஆனால், தமிழக அரசு ஜவுளி தொழில் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை. அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாமல், கடும் நெருக்கடியில் உள்ளோம். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி மட்டுமே செயல்பட்டு வருகிறது. தொழில் துறையினரான எங்கள் ஓட்டுகள்

தேவையில்லை என்று கருதுவதாகவே இது உள்ளது. வழக்கம்போல் தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு செல்லாமல், ஜவுளி துறையில் உள்ள பிரச்னைகளை களைந்து, தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us