நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; காங்கயம், பங்களாபுதுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 45. இவரது மனைவி சந்திரிகா, 43. இவர் ஈரோடு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், ஈஸ்வரன், 50 என்ற எலக்ட்ரீசியனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தார். அந்த தொகையை திருப்பி கேட்ட போது, சந்திரிகாவுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. புகாரின் பேரில், இருவரிடம் விசாரிக்க போலீசார் அழைத்தனர். அப்போது, சந்திரிக்காவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஈஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.