/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நில பிரச்னையில் எலக்ட்ரீசியன் கடத்தல் கும்பல் கைது: முக்கிய நபர் தலைமறைவு
/
நில பிரச்னையில் எலக்ட்ரீசியன் கடத்தல் கும்பல் கைது: முக்கிய நபர் தலைமறைவு
நில பிரச்னையில் எலக்ட்ரீசியன் கடத்தல் கும்பல் கைது: முக்கிய நபர் தலைமறைவு
நில பிரச்னையில் எலக்ட்ரீசியன் கடத்தல் கும்பல் கைது: முக்கிய நபர் தலைமறைவு
ADDED : டிச 11, 2024 05:05 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் அருகே நில பிரச்னை தொடர்பாக, எலக்ட்ரீஷியனை கடத்திய, ஐந்து பேரை பெருமாநல்லுார் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, 55, எலக்ட்ரீஷியன். இவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த, 6ம் தேதி ரங்கசாமி, வீட்டுக்கு நான்கு பேர் காரில் வந்துள்ளனர். தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து, விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் வாருங்கள் என கட்டாயப்படுத்தி காரில் அழைத்து சென்றுள்ளனர்.
பழநி சென்ற நான்கு பேரும், கொடைக்கானல் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜ் அறையில் அடைத்து வைத்துள்ளனர். மறுநாள் திருப்பூர் அழைத்து வந்து, கோவில்வழி பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்று விட்டனர். இது குறித்து, ரங்கசாமி, பெருமாநல்லுார் போலீசில் புகார் செய்தார்.
விசாரித்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட நெருப்பெரிச்சலை சேர்ந்த ஸ்டாலின், 39, பூலுவப்பட்டியை சேர்ந்த சதாசிவம், 35, போயம்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன், 35, பாண்டியன் நகரை சேர்ந்த சூரிய பிரபாகரன், 34, அங்கேரிபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், 39, என ஐந்து பேரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
திருப்பூரை சேர்ந்த சண்முகம் என்பவர், 2014ல், ரங்கசாமியிடம், 80 சென்ட் நிலம், 10.30 லட்சம் ரூபாய்க்கு வாங்கி கொள்வதாக கூறி, முதல் தவணையாக, 6.80 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, நான்கு மாதத்தில் கிரயம் செய்து கொள்வதாகவும், அப்போது மீதி பணத்தை கொடுப்பதாக ஒப்பந்தம் செய்தார். ஆனால், நான்கு மாதத்தில் நிலத்தை கிரயம் செய்யவில்லை.
இந்நிலையில், தற்போது, கிரயம் செய்து தரும்படி சண்முகம், ரங்கசாமியிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, ஆவேசம் அடைந்த சண்முகம், ரங்கசாமியை மிரட்ட ஆள் வைத்து கடத்தி சென்றனர்.
இது குறித்து, அவரின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சண்முகம் பயத்தில் ரங்கசாமியை, திருப்பூரில் விட்டு சென்றுள்ளனர். தலைமறைவாக உள்ள சண்முகத்தை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

