/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோலாரில் மோட்டார்; ஊக்குவிக்கும் மின்வாரியம்
/
சோலாரில் மோட்டார்; ஊக்குவிக்கும் மின்வாரியம்
ADDED : ஜூலை 02, 2025 11:58 PM
திருப்பூர்; 'புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆற்றலை அதிகப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வெப்ப ஆற்றல் உற்பத்தியை குறைக்கும் நோக்கில், சோலார் மின்னாற்றலை அதிகம் பயன்படுத்த வேண்டும்' என, மின்வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்வாரியம் சார்பில், விவசாயிகளுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதில் கூறியுள்ளதாவது:
பகல் நேரங்களில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்க கூடிய, இயற்கை வளமான சூரியசக்தி மின்னாற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். இதன் வாயிலாக வெப்ப ஆற்றல் வாயிலாக மின் உற்பத்தி செய்வது குறையும்; இது, பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும்.
எனவே, விவசாயிகள் பகல் நேரங்களில், இயன்ற ளவு சோலார் மின்னாற்றல் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.