/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு முடிவுக்கு எதிராக மின் வாரியம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு பாய்ச்சல்
/
அரசு முடிவுக்கு எதிராக மின் வாரியம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு பாய்ச்சல்
அரசு முடிவுக்கு எதிராக மின் வாரியம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு பாய்ச்சல்
அரசு முடிவுக்கு எதிராக மின் வாரியம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு பாய்ச்சல்
ADDED : ஜூன் 29, 2025 12:14 AM

திருப்பூர் : ''தமிழக முதல்வரின் கொள்கை முடிவுக்கு எதிராக, மின் வாரியம் செயல்படுவதை கண் டித்து, தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்' என மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது.
தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை சேர்ந்தவர்கள், 46.45 லட்சம் பேர் (46,45,867). இதில், உற்பத்தி துறை சார்ந்த, 11.69 லட்சம் பேர், சேவை துறையில், 33.76 (33,76,867) பேர் உள்ளனர்.
இவர்களில், 50 கிலோவாட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்கள் மட்டும், 85 சதவீதம்; 51 முதல், 100 கிலோவாட் வரை பயன்படுத்துவோர், 7 சதவீதம், 100 முதல், 112 கிலோவாட் வரை 8 சதவீதம், 112 முதல் 150 கிலோவாட் வாரை, 0.25 சதவீதம் பேர் உள்ளனர்.
உயரழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோர், 11 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த, 2022, 2023, 2024ம் ஆண்டுகளில், 59.61 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது; இதர கட்டணங்களும் அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டும், 4வது ஆண்டாக, மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தொழில்களை பாதுகாக்க மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு மனு அனுப்பினால், மின்வாரியம் பரிசீலித்து வருவதாக பதில் அளிக்கிறது.
குறு, சிறு தொழில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மங்கலம் அக்ரஹாரப்புத்துார் விளையாட்டு மையத்தில், நடந்தது.
மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது:
ஒரு கோரிக்கையை யார் பரிசீலிப்பது என்பது தெரியாத அளவுக்குதான் மாநில நிர்வாகம் நடக்கிறது.
இந்தாண்டில், மின் கட்டணம் உயர்த்துவதை தடுக்க வேண்டும். மின் வாரியம் கோரும் கூடுதல் கட்டணத்தை, அரசே செலுத்த முன்வர வேண்டும்.
மேற்கூரை சோலார் உற்பத்தியை ஊக்குவிக்காமல், 1 சதவீதம் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. கடனில் மூழ்கியுள்ள மின்வாரியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். மின்வாரியம், மாநில அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது.
தொழில்துறையில், தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவோம் என்ற முதல்வரின் கொள்கை முடிவுக்கு எதிராக, தமிழக மின்சார வாரியம் செயல்படுவதை கண்டித்து, தகுந்தஅறிவுரை வழங்க வேண்டும். மாநில தொழில் நலனை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.