/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : நவ 04, 2024 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்ட மின்நுகர்வோருக்கான குறை தீர் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், நாளை நடக்கிறது.
மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில், மின்வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உடுமலை கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம், நாளை, (6ம் தேதி) நடக்கிறது. ஏரிப்பாளையம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது. உடுமலை கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று, பயன்பெறலாம். இத்தகவலை உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.